FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... கிராமிய வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கிராமிய வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

16 செப்டம்பர் 2026, 3:46 pm IST
வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வு எழுதும் தேர்வர்கள் - கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசின்கீழ் செயல்படும் கிராமிய வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 13,706 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையமான இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணி: Office Assistant (Multipurpose)

Advertisement

Advertisement

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale - 1(Assistant Manager)

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்புடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.9.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale - Il (Specialist Manager)

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்புடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 21-லிருந்து 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale - II(Specialist Manager)

தகுதி: Electronics,Computer Science,Information Technology போன்ற பாடப் பிரிவுகள் ஏதாவதொன்றில் 50% மதிப்பெண் களுடன் இளநிலைப் பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 21-லிருந்து 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale- II (General Banking)

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க Agriculture, Horticulture, Dairy, Animal Husbandary, Forestry,Veterinary Science, Agricultural Engineering,Pisciculture தொரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.9.2026 தேதியின்படி 21-லிருந்து 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale III (Senior Manager)

தகுதி: 50% மதிப்பெண்களுடன் வங்கித் துறை, நிதி, சந்தைப்படுத்தல், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம், கணக்கியல் ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு இரண்டு வருடங்களும், முதுநிலை மேலாளர் பணிக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.

வயது வரம்பு சலுகை: ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளி, முன்னாள் ரானுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Office Assistant, Officer (Scale-1), Officer- Scale II/II பணிக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Officer Scale-1 Law பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி

முதன்மைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருநெல்வேலி

ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது , ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ 850. இதர அனைத்து பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.9.2026

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர் - 2026

முதன்மைத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் - 2026

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம்: ஜனவரி - 2027

நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம்: பிப்ரவரி - 2027

தேர்வு மற்றும் முடிவுகள் குறித்த சரியான நாள் விபரம் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

IBPS Recruitment 2026 for Group A,B 13715 Office Assistants Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments