காப்பீடு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய அரசால் முழுமையாகச் சொந்தமாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம். ரூ. 21,400 கோடிக்கும் அதிகமான மொத்த பிரீமியம் வருவாயைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், நாடு முழுவதும் சேவை மையங்கள் உள்பட 1200-க்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது நேரடி ஆள்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 225 நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பார்ப்போம்...
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HO:HRM: REL:AD:1:2026
பணி: Administrative Officers (Generalists & Hindi Officers)
மொத்த காலியிடங்கள்: 225
பணி: Administrative Officer (Generalist) - 200
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administrative Officer (Hindi) - 25
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளநிலைப் படிப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் படித்து பட்டம் பெற்று ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது, ஓபிசி பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் குறைந்தது 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.82,485 - 1,56,745
வயதுவரம்பு: 30.6.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல்கட்ட எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும்.
முதல்கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 22.10.2026
இரண்டாம் கட்ட தேர்வு நடை பெறும் நாள்: 30.11.2026
முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 250. இதரபிரிவினர்களுக்கு ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
The Company proposes to recruit young and dynamic candidates for its offices all over India for its requirement in Generalists and Hindi discipline.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.