FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: 170 பணியிடங்கள்!

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: 170 பணியிடங்கள்! - டிஎன்பிஎஸ்சி
பகிர்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களை (நேர்முகத் தேர்வு பதவிகள்) நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிதி ஆலோசகர் மற்றும் நிறுவனச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்த உள்ளது.

தமிழக அரசின் சிமென்ட்ஸ் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 170 வகையான தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விளம்பர எண். 741 வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 08/2026

தேர்வின் பெயர்: Combined Technical Service Exam (Interview Posts)

காலியிடங்கள்: 170

சம்பளம்: தமிழக அரசு விதி முறைப்படி வழங்கப்படும்.

தகுதி: அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் ஏதாவதொன்றில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி மற்றும் பணி அனுபவம் பற்றிய விவரம் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி ஆல் நடத்தப்படும் தமிழ் மொழித்திறன் தேர்வு, பொதுப் பாடங்கள், மனத்திறன் கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. நிரந்தர பதிவு முறையில் தங்களைப் பற்றிய விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பது எப்படி? இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் ஒரு முறை பதிவு செய்த பின்பு இந்த தேர்வுக்கான விண்ணப்பதை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் நேரடியாக பூர்த்தி செய்யலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC-Combined Technical Service Examination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments