ஒரே கிளிக்! அனைத்து சான்றுகளும் ரெடி! டிஜிலாக்கரில் கணக்குத் தொடங்குவது எப்படி?
ஒரு கிளிக்கில் அனைத்து சான்றுகளும் கைவசமாக டிஜிலாக்கரில் கணக்குத் தொடங்குவது எப்படி என்பது பற்றி..
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என அனைத்தையும் இன்னமும் பையில் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்காகவே வந்திருப்பது டிஜிலாக்கர் வசதி.
செல்போனில் டிஜி லாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். எங்குச் சென்றாலும் ஒரே கிளிக்கில் எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். காண்பிக்கலாம். பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் பரிமாறவும் முடியும்.
அதற்கு, முதலில் செல்போனில் உள்ள செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் பிளே ஸ்டோர் போன்ற அமைப்பில் சென்று DigiLocker என்று டைப் செய்ய வேண்டும். அதில் வரும் செயலியின் கீழே National eGovernance Division, Government of India என்று இருப்பதை தெரிவு செய்து செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
அதில், பயனர்களுக்குக்கான மொழிப் பட்டியல் வரும், அதில் ஆங்கிலம், தமிழ் என்று உங்களுக்கு உரிய மொழியை தெரிவு செய்து உள்நுழையலாம்.
பிறகு அந்த செயலியைப் பயன்படுத்த சில ஒப்புதலைக் கொடுக்க வேண்டியதிருக்கும். பிறகு, ஒரு செல்போனில் இரண்டு சிம் கார்டுகள் இருந்தால், எந்த சிம் அடிப்படையில் டிஜி லாக்கர் செயல்பட வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டியது வரும்.
பிறகு, பயனரின் பெயர் வரும். அதன்பின் கணக்குத் தொடங்க என்பதை கிளிக் செய்தால், தேர்வு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட அனுமதிக்க வேண்டும். ஓடிபி சரியாக இருக்கும்பட்சத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு ஆதார் முக அடையாளத்தை உறுதி செய்வது அல்லது ஆதார் ஓடிபி வழியாக உறுதி செய்வது என இரண்டு வழிமுறைகளில் ஆதார் எண்ணை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
முக அடையாளத்தை உறுதி செய்வதை தெரிவு செய்தால், அதில் கேமரா தோன்றும். அந்த வட்டத்துக்குள் பயனரின் முகத்தை வைக்க வேண்டும். ஆதார் முக ஒற்றுமை உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அறிவிப்பு வரும்.
ஒருவேளை, ஓடிபி முறையில் உறுதி செய்வதை தெரிவு செய்தால், ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை தானாக உள்ளிட அனுமதிக்க வேண்டும்.
அவ்வளவுதான், உங்களுக்கான கணக்குப் பக்கம் வந்துவிடும். அதில் பயனரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். அதில் முக்கிய ஆவணங்களின் பட்டியல் இருக்கும். பயனருக்குத் தேவையான ஆவணங்களை அதன் விவரங்களைக் கொடுத்து பதிவிறக்கம் செய்து டிஜி லாக்கரில் சேமித்துக் கொள்ளலாம்.
எப்போது ஆதார் தேவை என்றாலும் டிஜி லாக்கரில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். பான் எண் என அனைத்தையும் இதில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Learn how to open an account on DigiLocker with all your credentials in one click.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.