ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் - புகைப்படங்கள்
சரியாக காலை 6.01 மணிக்கு கலங்காமற் காத்த கணபதி, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி விமானங்கள், ராஜகோபுரங்கள், ஏனைய விமானங்கள் மகாகும்பாபிஷேகம், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி, குரு தட்சிணாமூர்த்தி விமானம் மற்றும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மகாகும்பாபிஷேகம் நடைபெற்று பனிரெண்டு ஆண்டுகள் நிறைவுடைந்ததையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முன் வந்தது.
மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கியது.
கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. 6 வது கால யாகசாலை பூஜைகள் நேற்று அதிகாலை நடந்தது. அதனைத்தொடர்ந்து திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது.
ஸ்ரீ ஆலங்குடி குருபகவான் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியை தொடர்சியாக கண்காணித்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவ்வப்போது தக்க அறிவிரைகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் நடைபெற்ற மகாகும்பாபிஷேகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.