தலைநகரம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
சுந்தர்.சி நடித்திருக்கும் ‘தலைநகரம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தை துரை இயக்கியுள்ளார்.
சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் துரை இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2.
2006ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம்.
சுந்தர்.சியுடன் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார் சுந்தர். சி.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் பரத்.
முதல் பாகத்தில் சுந்தர்.சி ஏற்று நடித்த 'ரைட்' கதாபாத்திரத்தை சுற்றியே இப்படமும் இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது.
படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து.
விழாவில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.