இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'பாக்கெட் நாவல்'.படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருவதும் 'பாக்கெட் நாவல்' மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், கதாப்பாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. மாளவிகா மோகனன்.'பாக்கெட் நாவல்' முலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.