அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான 'அன்பில் அவன்' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
'அன்பில் அவன்' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருவதையடுத்து, படத்தின் வெற்றிக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு.ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.படக்குழுவினர் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். ப்ரீத்தி முகுந்தன்நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.