உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரிப்பர்.வெண் பொங்கல் உடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிட்டு, வழிபாடு நடத்தி பின் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.மாட்டுப் பொங்கலன்று மெரினா கடற்கரையில் தனது பசுவைக் குளிப்பாட்டும் நபர் ஒருவர்.
Advertisement
Advertisement
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும்.மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.சென்னை தி.நகரில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் பண்டிகையின் போது கால்நடைகளுக்கு உணவளிக்கும் சிறுவன் ஒருவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.