முகப்பு
செய்திகள்

தேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்

Updated On : 26 பிப்ரவரி 2021, 5:32 pm IST
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
பகிர்:
கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கடந்த 8-ம் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின.
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது கல்வித்துறை.

Advertisement

Advertisement

மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
10 மற்றும் 11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆன்லைன் மூலமாக அனைத்து பாடங்களையும் முடிக்க முடியாமல் பெரும் அச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மகிழ்ச்சியில் பள்ளி மாணவிகள்.
பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானதால் மாணிகள் பெரும் மகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments