சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு, மாரத்தான் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். - ANIவிழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். - ANIவிழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன், டிஜிபி, காவல் ஆணையர், தலைமைச் செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். - ANI
Advertisement
Advertisement
விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய், இளைஞர்களுடன் இணைந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி அசத்தினர். - ANIபோதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டு பங்கேற்றனர். - ANIமாரத்தானை தொடக்கி வைத்ததுடன், மக்களோடு மக்களாக முதல்வர் விஜய்யும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றார்.
சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிடம் அருகில் இன்று நடைபெற்ற ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026ல் முதல்வர் விஜய். - ANIசென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிடம் அருகில் இன்று நடைபெற்ற ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026ல் முதல்வர் விஜய். - ANIஉறுதிமொழியை முதல்வர் விஜய் வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.