மைசூரில் நடைபெற்ற 'தசரா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் 'சூர்யகிரண்' விமான சாகச குழுவினர் நடத்திய பிரம்மாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சி.
ஒழுக்கம், துல்லியம், குழுப்பணி, தொழில்முறை சேவை ஆகியவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க கலவை.மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் இந்த சாகசக் காட்சியைக் கண்டு கழித்தனர்.மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் வானத்தை அலங்கரித்த விமானிகளின் பிரமிக்க வைக்கும் காட்சி.மூவண்ணக் கொடியின் நிறங்களால் வானத்தை அலங்கரித்த விமானிகள்.இந்திய விமானப்படையின் திறனுக்கு இது ஒரு சிறந்த சான்று என்ற பெருமிதத்துடன் வானத்தை அலங்கரித்த விமானிகள்.நாட்டின் பெருமையை பறைசாற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி.வானில் விமானங்கள் ஒன்றையொன்று நெருங்கிப் பறந்தும், பல்வேறு வடிவங்களில் அணிவகுத்தும் நிகழ்த்திய சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.