முகப்பு

சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு! நாளை வானில் தெரியும்!

நாளை பூமிக்கு மிக அருகில் வரும் சூப்பர் மூன் என்ற அரிய நிகழ்வு பற்றி..

55 வினாடிகள் முன்பு
சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு! நாளை வானில் தெரியும்!
பெரு நிலவு இன்று வானில் தெரியும்! - file photo
பகிர்:

இயற்கையின் பல அதிசயங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு. இந்த அரிய நிகழ்வு வானில் நாளை (நவ. 24) தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் வரும் முழு நிலவு பாரம்பரியமாக பிரம்மாண்ட சூப்பர் மூன் என்றழைக்கப்படுகிறது. வானில் நாளை (செவ்வாய்க்கிழமை) பீவர் சூப்பர் மூன் எனப்படும் பிரம்மாண்ட முழுவு நிலவு தோன்றவுள்ளது.

இந்த அரிய நிகழ்வு வானில் இந்திய நேரப்படி நாளை இரவு 8.23 மணிக்கு தனது முழுமையான ஒளியை பரப்ப உள்ளது. நாளைய தினம் பௌர்ணமி என்பதால், வழக்கமான அளவைக் காட்டிலும் நிலவு சற்று பெரிதாகவும், இன்னும் வெளிச்சமாகவும் வானில் தோன்றும்.

Advertisement

Advertisement

ஏனெனில், இதுபோன்ற நாள்களில் தன்னுடைய சுற்றப்பாதையில் பூமிக்கு முன்னெப்போதையும்விட நெருக்கமாக நிலவு வருகிறது. நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் 3,60,768 கி.மீ தொலைவில் வருவதால் வழக்கமான முழு நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

இது இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் ஆகும். இதனை வெறும் கண்களாலேயே பார்க்கலாம், தொலைநோக்கி எதுவும் தேவையில்லை. இதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 23-ம் தேதியும், அதற்கடுத்து ஜனவரி 22-ம், பிப்ரவரி 20-ம் தேதியும் அடுத்தடுத்து சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

அதென்ன ப்ளூ மூன்.. ப்ளூ மூன் எனப்படுவது அதன் நிறத்தைக் கொண்டு கூறப்படுவதில்லை. மாறாக, ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும் நாள்களைத்தான் ப்ளூ மூன் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.