இன்று வானில் தோன்றும் அதிசயம்! ஹண்டர்ஸ் மூன்.. காணத் தவறாதீர்! சென்னையில் தெரியுமா?
இன்று வானில் ஹண்டர்ஸ் மூன் காணப்படும், எனவே மக்களே காணத் தவறாதீர்
அக்டோபர் மாதத்தில் முழு நிலவு தோன்றுவதை ஹண்டர்ஸ் மூன் என்று அழைக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று தோன்றும் நிலவு சற்று அளவில் பெரியதாகக் காணப்படுமாம்.
ஹண்டர்ஸ் மூன்று என்று நிலவுக்கு ஒரு செல்லப் பெயர் இருக்கிறது. இதனை தமிழில் அப்படியே மொழிப் பெயர்த்தும் வேட்டைக்காரன் நிலவு என்று சொல்கிறார்கள். சில ஊர்ப் பக்கங்களில் அரிசி நிலவு, அறுவடை நிலவு, சோள நிலவு என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்.
இதற்குக் காரணம், அறுவடைக் காலம் முடிந்து, வயல்வெளிகள் எல்லாம் வெற்று நிலமாக மாறியிருக்கும். அப்போது விலங்குகளை மக்கள் எளிதாக வேட்டையாடி சாப்பிட முடியும் என்பதால், அவர்கள் தங்கள் வழக்கத்தில் இன்றைய நிலவை ஹண்டர்ஸ் மூன் என்று அழைத்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
அறுவடை முடிந்து நிலவொளியில் அரிசியை விவசாயிகள் உலர்த்தியதால் அரிசி நிலவு என்றெல்லாம் அவரவர் பழக்கங்களில் இருந்த வழக்கு மொழிகளால் நிலவை செல்லமாக அழைத்திருக்கிறார்கள்.
2026ம் ஆண்டு முழுவதும் தென்படும் 13 முழு நிலவு நாளான பௌர்ணமியில் இது 11வது முழு நிலவு நாள். ஆனால், மேகக் கூட்டங்கள் அனுமதித்தால்தான் இந்த முழு நிலவை நீங்கள் பார்க்க முடியும்.
சரியாக 7 மணி முதல் 8 மணிக்குள் இந்த அழகிய நிலவைக் காண உகந்த நேரம். மாலையிலேயே நிலவு தோன்றியிருக்கும், ஒரு பக்கம் சூரியன் மறையத் தொடங்கியிருக்கும். இந்த நேரத்திலும் நிலவையும் சூரியனையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதிர்ஷ்டசாலிதான்.
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மேகக் கூட்டமாக இருந்ததால் முழு நிலவைக் காண முடியாமல் போயிருக்கலாம். கவலை வேண்டாம், இன்றும் முழு நிலவு தென்படும். மழை மேகங்கள் அனுமதித்தால் சந்திக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.