FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

19.2.1976: வரதட்சிணை சட்டம் மீறினால் ஓராண்டு சிறைவாசம் கிட்டும்

வரதட்சிணை சட்டம் மீறினால் ஓராண்டு சிறைவாசம் பற்றி...

Updated On : 19 பிப்ரவரி 2026, 4:03 am IST
19.2.1976
பகிர்:

சண்டிகர், பிப், 18 - வரதட்சிணை தடைச் சட்டத்தை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படுவதற்கு வகை செய்யும் மசோதா நேற்று பஞ்சாப் சட்டசபையில் நிறைவேறியது. அதன் பிறகு சபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

1976 வரதட்சிணை தடைச் சட்டத் திருத்த மசோதாவில் திருமணக் காலத்தில் சீர் வரிசைகளை கொலு வைப்பது, வரதட்சிணை கொடுப்பது, வாங்குவது, அல்லது கேட்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. திருமணக் கோஷ்டியில் 25 பேர்தான் இருக்கலாமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. நிச்சய தாம்பூலம் அல்லது திருமணத்தின் போது அதிக பட்சம் ரூ. 11க்கு மேல் (பதினொன்று மட்டுமே) கொடுக்கக் கூடாது என்று விதிக்கப்படுகிறது.

ஷரத்துக்களை மீறினால் ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனையோ, அல்லது ரூ. 5000 அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

Advertisement

Advertisement

கவர்னர் அறிவிப்பு - என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரி அட்மிஷன்: நேரடி பேட்டி முறை எடுபடும்

சென்னை, பிப். 18 - தொழிற் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் விஷயத்தில் ஊழலை ஒழிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக தற்போதுள்ள நேரடி பேட்டி முறை ரத்து செய்யப்படும் என்று கவர்னர் ஷா இன்று அறிவித்தார்.

ராஷ்டிரபதி ஆட்சியைத் தொடர்ந்து மாநிலத்தின் பிரதம நிர்வாகியாகப் பொறுப்பேற்ற முதல் தடவையாக இன்று செகரடரியேட்டில் மந்திரிசபை அறையில் கவர்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

தொழிற் கல்லூரிகளில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு 18 சதவிகிதம், பிற்பட்ட வகுப்பினருக்கு 31 சதவிகிதம் என்ற தற்போதைய ஒதுக்கீடு நீடிக்கும் என்று கவர்னர் கூறினார்.

இந்தப் புதிய ஏற்பாடு வரும் கல்வியாண்டிலிருந்து அமலாகும், மற்ற கல்லூரிகளுக்குப் பின்னர் விஸ்தரிக்கப்படும். ...

... மொழிக் கொள்கை

கவர்னர் மேலும் கூறியதாவது: தற்போதைய மொழிக் கொள்கையில் எவ்வித மாறுதலும் இராது. வேறெந்த கொள்கையிலும் மாறுதலிராது. எந்தக் கொள்கையும் மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது. ஆனால், யாராவது எந்த மொழியாவது கற்க விரும்பினால் அதற்கு உதவப்படும். அதே சமயத்தில் மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக எதையும் திணிக்கும் பேச்சே கிடையாது. இஷ்டப்பட்டு யார் எந்த மொழியைக் கற்க விரும்பினாலும் அதற்கு வசதி செய்து தரப்படும். ...

summary

19.2.1976: Violation of the dowry law will result in one year in prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments