FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

7.6.1976: விமான விபத்தில் ஒரு மாநில முதல்வர், 3 மந்திரிகள் பலி

மலேசியாவில் விமான விபத்தில் ஒரு மாநில முதல்வர், 3 மந்திரிகள் பலி...

Updated On : 7 ஜூன் 2026, 5:18 am IST
7.6.1976 - Dinamani
பகிர்:

கோடா கினபாலு (மலேசியா) - ஜூன். 6 - மலேசியா நாட்டில் இன்று நடந்த ஒரு விமான விபத்தில் அந்த நாட்டின் ஒரு மாநில முதல்வரும், 3 மந்திரிகளும் உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த இதர 10 பேரும் மாண்டனர்.

சாபா மாநிலத்தின் முதல்வர் துன் முகம்மத் புயாத் ஸ்டீபன்ஸ், அந்த மாநில நிதி மந்திரி தாடுக் சாலே சுலாங், வீட்டு வசதி மந்புதிரி தாடுக் பீடர் மஜின்தீன், தகவல் தொடர்பு மந்திரி ஜங்தி யன் வூ ஆகியோர் இவ்வாறு மாண்டனர். இதனை அந்த மாநிலத்தின் துணை முதல்வர் ஹாரிஸ் சாலே அறிவித்தார்.

முதல்வர் மகனும் பலி

Advertisement

Advertisement

பின்னர், அவர் இந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவி ஏற்றார்.

இறந்து போன முதல்வர் துன் புயாத்தின் மக மகன், ஜோஹரியும் இந்த விமான விபத்தில் இறந்து போனார்.

இந்த விபத்தில் இறந்துபோன சாபா மாநில முதல்வர் துன் புயாத் பதவியேற்று 6 வாரங்கள் தான் ஆகிறது. கடந்த ஆண்டு வரை அந்த மாநிலத்தின் தலைவராக இருந்தார். பின்பு கடந்த ஏப்ரலில் முதன் முதலில் புதிதாக அமைக்கப்பட்ட ஜாயா கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்வரானார்.

முன்னர் இவர் ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவுக்கும், நியூஜிலாந்துக்கும் மலேசியாவின் தூதராகவும் இருந்தவர்.

இவர்களை ஏற்றிச் சென்ற விமானம் மாநிலத் தலைநகரான கோடா கினபாலுவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் செம்புலான் என்னும் இடத் இடத்தில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.

சாபா ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 14 பேர் சென்றனர். அவர்கள் அனைவரும் விபத்தில் இறந்ததாக போலீசார் கூறினர்.

உள்நாட்டு ரூட்டில் சென்று கொண்டிருந்த அந்த விமானம் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லாபுவானிலிருந்து தலைநகர் கோடா கினபாலுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகப் போலீசார் கூறினர்.

சாபா, மலேசியாவின் மாநிலங்களில் ஒன்றாகும். அது வடக்குப் போர்னியோ தீவில் அமைந்துள்ளது.

இந்தியா - பாக் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்க துரித ஏற்பாடு

அமிர்தசரஸ், ஜூன். 6 - இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 3 கி. மீ. தொலைவில் உள்ள அடாரி கிராமத்தில் பழைய சிறு ரயில் நிலையம் 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது. இரு நாடுகளிடையே துண்டிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து அனைத்தையும் மீண்டும் ஏற்படுத்த வகை செய்யும் சிம்லா உடன்பாட்டின்கீழ் இந்தியா - பாகிஸ்தான் ரயில் போக்குவரத்தை ஏற்க ரயில் நிலையம் சீரமைக்கப்படுகிறது.

அடாரி கிராமம் இந்திய பகுதியின் கடைசி முனை வரை தற்போது ரயில் தண்டவாளத்தால் இணைக்கப்பட்டுவிட்டது.

துண்டிக்கப்பட்ட பாதையை மீண்டும் இணைப்பதில் இரு நாட்டு எஞ்சினியர்களும், தொழிலாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு ரயில்வே எஞ்சினியர்கள் அடாரிக்கும் எல்லைக்கும் இடையே 3 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணியை மிக துரிதமாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.

ரயில் பாதை அமைப்பு பூர்த்தியாகி, பரிசோதிக்கப்பட்டு, சிக்னல்களும் அமைக்கப்பட்டு விட்டதால், புது பணிக்கு ஏற்ப ஸ்டேஷன் சீரமைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தரப்பிலும் விறுவிறுப்பு காணப்படுகிறது. எல்லையிலிருந்து சுமார் 300 கெஜம் தொலைவில் பானுசாக் என்ற கிராமத்தில் புது ரயில் நிலையம் தோன்றியிருக்கிறது. போக்குவரத்து மீண்டும் ஏற்படுத்தும் உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே அவர்கள் நிர்மாணப் பணியைத் துவக்கி விட்டனர்.

அமிர்தசரஸில் வர்த்தகர்களிடையே புது உற்சாகம் தோன்றியிருக்கிறது.

புது உடன்பாட்டினால் பாகிஸ்தானுக்கு ஈரான் சரக்குகளை (இந்தியா வந்து சேர வேண்டியவை) ஏற்றி, இறக்க பானுசாக்கில் புது யார்டும் அமைக்கப்படுகிறது.

summary

7.6.1976: State Chief Minister and 3 ministers killed in plane crash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments