முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

9.6.1976: ஐ.சி.எப். தயாரித்த மாடி ரயில் பெட்டி: அடுத்த மாதம் ஓடும்

ஐ.சி.எப். தயாரித்த மாடி ரயில் பெட்டி பற்றி...

Updated On : 9 ஜூன் 2026, 4:00 am IST
9.6.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஜூன் 8 - பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மாடி ரயில் பெட்டி, டில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையே செல்லும் தாஜ் எக்ஸ்பிரஸில் பூட்டப்படும் என்று இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜர் ஜே. மாத்தன் இன்று நிருபர்களிடம் கூறினார்.

ஆசியாவிலேயே முதலாவதாகத் திகழும் இந்த மாடி ரயில் பெட்டி ரூ. 8 லட்சம் செலவில் கட்டப்பட்டது. சாதாரண ரயில் பெட்டி ஒன்றில் 90 பேர்தான் பயணம் செய்ய முடியும். அதைக் கட்டுவதற்கு ரூ. 4.5 லட்சம் செலவாகின்றது. இந்த மாடி ரயில் பெட்டியில் கீழேயும் மேலேயும் மொத்தம் 148 பேர் பயணம் செய்ய முடியும். இந்த ரயில் பெட்டி பல்வேறு ஆரம்பக் கட்ட சோதனைகளை கடந்துவிட்டது. மத்திய ரயில்வேயிடம் வருகிற ஜூலை மாதம் ஒப்படைக்கப்படும்.

இங்கு கட்டப்பட்ட மாடி ரயில் பரீட்சார்த்தமானது. இதன் அனுபவபூர்வமான பலனையொட்டி ரயில்வே போர்டு இத்தகைய ரயில் பெட்டிக்கு மேலும் ஆர்டர்கள் வழங்கலாம்.

Advertisement

Advertisement

மாடி ரயில் பெட்டி நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதாயினும், இதில் தூங்கும் வசதியில்லாததாலும், அதிகமான மூட்டை முடிச்சுகள் வைக்க இயலாததாலும் குறைந்த தூர இடைவெளியில் இதனை விடுவதே சிலாக்கியமானது என்று கருதப்படுகிறது. ...

காவிரி: 9 எம்.பி.களுடன் நிதி மந்திரி ஆலோசனை

சென்னை, ஜூன், 8- காவிரி நீர் பங்கீடு தகராறு சமபந்தமாக விரைவில் சுமூகமான உடன்பாடு காண்பதற்கு "இதற்கேற்ற மட்டத்தில்" புது முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்ற பொதுக் கருத்து இன்று ராஜ்பவனில் யூனியன் நிதி மந்திரி சி. சுப்ரமண்யத்துடன் 9 பார்லிமெண்டு மெம்பர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின்போது உருவாகியது.

காவிரி பிரச்னை பற்றி மட்டுமின்றி, கோவை சிறுவாணி குடிநீர் திட்டம், சென்னைக்குக் கிருஷ்ணா நீர் பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.

இக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமின்றி பின்கண்ட 9 பார்லிமெண்டு மெம்பர்கள் கலந்து கொண்டனர். ஓ. வி. அளகேசன் (காங்கிரஸ்); முகம்மது ஷெரீப் (முஸ்லிம் லீக்); எம். கல்யாண காத்த சுந்தரம்(வ. கம்); பி. முத்து (வ. கம்); பி. மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்); இரா. செழியன் (தி. மு. க.) விசுவதாதன். கே. ஏ. கிருஷ்ணசாமி, வி. வி. சாமினாதன் (அண்ணா தி.மு.க.) கலந்து கொண்டனர். ...

summary

9.6.1976: Double-decker train coach manufactured by ICF: To run next month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.