23.6.1976: 135 வயது வரை வாழ்ந்த மலாசியா வாசி
மலாசியாவில் மிக அதிக வயதான நபராக அறியப்பட்டவர் 135 வயதில் காலமானது பற்றி...
கோலாம்பூர், ஜூன். 22 - மலாசியாவில் மிக அதிக வயதுள்ளவர் என சில அதிகாரிகளால் கூறப்படும் ஹாஜி சமுரிபின் ஹாஜி அக்ஸாரிப் 135 வயதில் நேற்று இறந்தார்.
அவருக்கு 15 குழந்தைகளும், 40 பேரக்குழந்தைகளும், 50 கொளளுப்பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர் கிராம மசூதியின் இமாமாக இருந்தார்.
இந்தியாவிலிருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட 2003 பறவைகள் இறந்தது
Advertisement
Advertisement
லண்டன், ஜூன். 22- இந்தியாவிலிருந்து "பிரிட்டிஷ் ஏர்வேஸ்" நிறுவன விமானத்தில் அனுப்பப்பட்ட சுமார் 2003 பறவைகள் இடைவழியில் இறந்து போனது குறித்து, பிரிட்டிஷ் அரசு ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அந்த விமானம் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு அந்த பறவைகளை ஏற்றிச் சென்றது. இடைவழியில், புயல் காரணமாக, அந்த விமானம், டோஹா, துபாய் ஆகிய விமான நிலையங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் தங்க வேண்டி இருந்தது. அப்போது அதிக உஷ்ணம் காரணமாகவும், போதிய நீர் இல்லாததாலும், அந்தப் பறவைகள் அப்படியே இறந்துவிட்டு பொசுங்கி இருக்கக்கூடும், இவ்வாறு, அந்த விமான கம்பனியின் ஓர் அதிகாரி தெரிவித்தார்.
கல்கத்தாவில் கிளம்பிய அந்த விமானம் துபாயில் இறங்கியிருக்க வேண்டும்; ஆனால் புழுதிப்புயல் காரணமாக அது டோஹாவுக்குத் திருப்பி விடப்பட்டது; பின்னர் மீண்டும் அது துபாய்க்கு வந்தது அங்கு அந்த விமான ஊழியர்கள் மாறினர். அப்போது அதிலிருந்த பறவைகளைப் பற்றி ஊழியர்கள் மறந்து விட்டனர்; பிறகு அந்த விமானம் லண்டனுக்கு வந்து சேர்ந்தபோது, அவற்றில் 1191 பறவைகள் இறந்துபோய்க் கிடந்தன.
இது குறித்து, லண்டனில், பிராணி வதை தடுப்பு சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளது. இனியாகிலும், பறவைகளை விமானங்களில் ஏற்றி வரும் போது, மனிதர்களைப் போலவே அவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த விமானக் கம்பெனிக்குக் கூறும்படி, அரசாங்கத்தை அது கேட்டுக் கொண்டுள்ளது.
23.6.1976: A Malaysian resident who lived to the age of 135.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.