FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

10.11.1976: கோதுமை பேர ஊழல் - கருணாநிதி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை அளிப்பு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

39 வினாடிகள் முன்பு
10.11.1976 - Dinamani
பகிர்:

சென்னை: நவ. 9 - கோதுமை பேர ஊழல் சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விசேஷ நீதிபதி எஸ். சுவாமிக்கண்ணு இன்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகையைக் கொடுத்தார்.

கருணாநிதி இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை, அவரது சார்பில் ஆஜரான வக்கில் கே. ராமசாமி, என். சண்முகம் ஆகியோர் குற்றப் பத்திரிகையையும், அது சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும் பெற்றுக் கொண்டார்கள்

சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றதாகவும், தஸ்தாவேஜுகளைத் திருத்தியதாகவும் வஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 161, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறை கருணநிதி மீது இந்த வழக்கைப் போட்டுள்ளது.

Advertisement

Advertisement

குற்றப் பத்திரிகையும், மற்ற தஸ்தாவேஜுகளையும் சரிபார்க்க வேண்டும் என்று கருணாநிதியின் வக்கீல் ராமசாமி கோரினார், குற்றப் பத்திரிகையும், இதர தஸ்தாவேஜுகளும் கோர்ட்டின் இரண்டு முதுநிலை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டுள்ளது என்று நீதிபதி சுவாமிக்கண்ணு கூறினார். ஆயினும், கருணாநிதியின் வக்கீல் விரும்பினால் அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

குற்றப் பத்திரிகையின் அசல் மற்றும் நகல், இதர தஸ்தாவேஜுகள் ஆகியவற்றைச் சரிபார்க்க மூன்றுவார அவகாசம் அளிக்க வேண்டும் என்று கருணாநிதியின் சார்பில் ஆஜரான வக்கில் கே. ராமசாமி கேட்டுக் கொண்டார். வேண்டும்போது அசல் பிரதிகளையும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விசேவ தஸ்தாவேஜுகளைப் பார்வையிடுவதற்கு ஒரு வார அவகாசம் போதுமானதாகும் என்று அரசுத் தரப்பில் ஆஐரான வக்கீல் என். டி. வானமாமலை கூறினார். ஏற்கனவே இந்த தஸ்தாவேஜுகள் கோர்ட்டின் முதுநிலை அதிகாரிகளால் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்புக்கும் பொதுவாக தாம் இரண்டுவார அவகாசம் அளிப்பதாகக் கூறிய நீதிபதி சுவாமிக்கண்ணு, மேற்கொண்டு விசாரணைக்காக வழக்கை இம் மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

summary

10.11.1976: Wheat Deal Scandal – Charge sheet filed in the case against Karunanidhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.