முகப்பு

29.11.1976: சென்னை வெள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்தார் சஞ்சய் காந்தி

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

26 நவம்பர் 2026, 3:19 pm
29.11.1976: சென்னை வெள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்தார் சஞ்சய் காந்தி
29.11.1976 - Dinamani
பகிர்:

சென்னை, நவ. 28 - மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு வியாசர்பாடியில் அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகே இன்று நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சஞ்சய் காந்தி பேசுகையில் வெள்ள நீரை வெளியேற்றுமாறும் தாழ்வான பகுதிகளை மேடாக்குமாறும் தாம் மாநில அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதாக் வியாசர்பாடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்தார்.

அது சாத்யப்படாவிட்டால், அவர்கள் குடிசைகளை கட்டிக் கொள்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

வெள்ள நிலைமையை வியாசர்பாடி மக்கள் தீரத்துடன் சமாளித்ததை அவர் பாராட்டினார். இது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது என்று என்னிடம் தெரிவித்தார்கள். இங்கு புன்சிரிப்பு முகங்களை காண்கிறேன் என்றார் சஞ்சய் காந்தி.

Advertisement

Advertisement

நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை தாம் பார்வையிட்டதாகவும் ஏராள வீடுகள் நாசமாகியுள்ளன அல்லது அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் எல்லா வீடுகளையும் திடீரென்று செப்பனிடப்படும் அல்லது திரும்பி கட்டித்தரவோ முடியும் என்று தம்மால் உறுதி கூற முடியாது என்று தெரிவித்த சஞ்சய் காந்தி குடிசைகளையும் வீடுகளையும் திரும்ப கட்டுவதற்கு சர்க்கார் சாத்யமான எல்லா உதவிகளையும் வழங்கும் என்று தெரிவித்தார்.

வீடிழந்தவர்களுக்கு உணவு வழங்குப் பிரச்னையை பற்றி அவர் குறிப்பிடுகையில் தேவையுள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன் என்று அவர் தெரிவித்தார். பழைய துணியாக இருந்தாலும் புது துணியாக இருந்தாலும் அவற்றை வசூலித்து தேவையானவர்களுக்கு வழங்குமாறு அவர் இளைஞர் காங்கிரஸைக் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு சாத்யமான எல்லா நிவாரண உதவிகளையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ...

அஸ்ஸாமிலிருந்து குரூட் எடுத்துச்செல்ல 212 கிலோ மீட்டர் நீள குழாய் அமைக்கும் பணி ஆரம்பம் - பிரம்மபுத்ரா நதிக்கு குறுக்கே போடப்படுகிறது

புதுடில்லி, நவ. 28 - தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் பொங்கைகாங் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குரூட் (கச்சா) எரி எண்ணெயை எடுத்துச்செல்ல 212 கிலோ மீட்டர் நீளமுள்ள குழாயை அமைக்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது.

இந்தக் குழாயை அமைப்பது மிகவும் சிரமமான பணியாக இருக்கும். கோஹாட்டியிலிருந்து பொங்கைகாங் வரையில் இது செல்லும். அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து 10 லட்சம் டன்னுக்கு மேற்பட்ட குரூட் எண்ணெய் பொங்கைகாங் சுத்திகரிப்பு ஆலைக்கு இந்தக் குழாய் மூலம்போகும். என்ஜினீயர்ஸ் புராஜக்ட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் வசம் இந்தக் குழாயை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சூழாய் போடுவதில் திறமை வாய்ந்த கனடா நாட்டு நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக அது இப்பணியைச் செய்கிறது.

கோஹாட்டி முனையில் வேலை ஆரம்பித்துள்ளது. 1300 மீட்டர் அகலமுள்ள பிரம்மபுத்திரா பாலத்திற்கு குறுக்கே குழாயைப் போடும் வேலை இப்போது நடக்கிறது. பிரம்மபுத்ரா நதியைக் கடப்பது மட்டுமின்றி, அஸ்ஸாம் மாநிலத்தின் மிகவும் சிரமமான சில தரைப் பகுதிகளையும் இந்தக் குழாய் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

அஸ்ஸாமில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக இந்த வேலையை முடிக்க வேண்டும். 1977-ம் வருடம் மார்ச் மாத இறுதிக்குள் இந்த வேலையை முடிக்க பணித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே வேலையை முடிக்க சுமார் 120 தினங்கள் மட்டுமே கிடைக்கக் கூடும். வேலை விறுவிறுப்பாக நடக்கிறது. 1000 என்ஜினியர்கள், டெக்னீஷியன்கள் வெல்டர்கள், மற்றும் இதரர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

summary

29.11.1976: Sanjay Gandhi toured the flood-affected areas of Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.