FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவில் முதல்முறை! ஏஐ காவல் நிலையம் தொடங்கும் ஹைதராபாத்!

ஹைதராபாத்தில் முதல் செய்யறிவு காவல் நிலையம் பற்றி..

செயற்கை நுண்ணறிவு - பிரதிப்படம்
பகிர்:

தெலங்கானாவின், ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள பஞ்சகுட்டா காவல் நிலையம் நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த காவல் நிலையமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகக் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

புதன்கிழமையன்று காவல் ஆணையர் சஜ்ஜனார் பஞ்சகுட்டா காவல் நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த புகார்தாரரிடம் நேரடியாகப் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு பணியாளர்களின் செயல்பாடு மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

Advertisement

Advertisement

மேலும், ஏசிபி முரளி கிருஷ்ணா, ஆய்வாளர் ஜஹாங்கீர் ஆகியோருடன் இணைந்து, காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

டிசம்பர் முதல் வாரத்தில், செயற்கை நுண்ணறிவு காவல் நிலையத்தை ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அங்கு மக்களிடையே எழும் விமர்சனங்களை முழுமையாக ஆய்வு செய்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

காவல் நிலைய வரவேற்பறையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள சேது கியோஸ்க் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 மொழிகளில் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்தப் புகார்களை உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்த்து, சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது முதல், வழக்கு நாட்குறிப்பு, புலனாய்வு அறிக்கைகள் மற்றும் குற்றப் பத்திரிகை தயாரிப்பது வரை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.