5.10.1976: டில்லியில் சர்க்காரியா கமிஷன் விசாரணை: மற்றொரு விமான நிறுவன அதிபர் சாட்சியம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புதுடில்லி, அக். 4 - நிர்ப்பந்தமான சூழ்நிலைகளின் கீழ், முன்னாள் தமிழ்நாடு முதன் மந்திரி கருணாநிதிக்கு அவரது அந்தரங்கச் செயலாளர் எம். வைத்தியலிங்கத்தின் மூலம் கமிஷன் தர விவசாயப் பணிகளுக்கான விமானக் கம்பெனிகள் ஒப்புக்கொள்ள வேண்டி வந்ததாக, சர்க்காரியா கமிஷன் முன்பு இன்று டில்லியில் சாட்சியமளித்த கம்பாட்டா தெரிவித்தார்.
விவசாய நிலங்களுக்குப் பூச்சி மருந்து தெளிப்பதற்காக ஏக்கருக்கு 90 பைசா வீதம் தரவேண்டும் என்பதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட கமிஷனாகும் என்றும் கம்பாட்டா சொன்னார்.
உடனடியாக முன்கூட்டியே 90 பைசா கமிஷன் கொடுத்தாலொழிய, தமிழ்நாட்டில் விமான மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவிக்குமாறு கருணாநிதி தம்மைக் கேட்டுக்கொண்டதாக வைத்தியலிங்கம் சென்னையில் தங்களிடம் கூறியதாக கம்பாட்டா சொன்னார்.
Advertisement
Advertisement
முன்னாள் தி. மு. க. முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் அவரது மந்திரி சபை சகாக்களில் சிலர் மீதான ஊழல், மற்றும் அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமான புகார்கள் பற்றி சர்க்காரியா கமிஷன் விசாரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் 1970ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரையில் விமானம் மூலம் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளித்தது பற்றிய புகார்கள் சம்பந்தமாக ஆர். எஸ். கம்பட்டா என்பவர் இன்று கமிஷன் முன்பாக சாட்சியம் அளித்தார். பம்பாயைச் சேர்ந்த கம்பட்டா, ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக டைரக்டராக இருந்தவர். சென்னையில் ஏற்கெனவே ஏழு சாட்சிகளை சர்க்காரியா கமிஷன் விசாரித்துள்ளது. ...
கூட்டுறவு, நிலவள வங்கிகளை இணைக்க ரிசர்வ் வங்கி குழு சிபாரிசு
பம்பாய். அக். 4 - மத்திய கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள் ஆகியவை எல்லா மட்டங்களிலும் இணைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நியமித்துள்ள கமிட்டி கூறியுள்ளது.
கமிட்டியின் அறிக்கை ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்டது. உத்தரவாதங்களைப் பெறும் சிக்கலான கூட்டுறவு நடைமுறைகளை எளிதாக்கி பல்வேறு காரியங்களுக்கு கடன் வழங்கலை வசதியாக்க கூட்டுறவு சட்டத்தைத் திருத்த கமிட்டி யோசனை கூறியது.
நீண்டகால வசதி திரட்டலுக்கு எளிய முறையை மேற்கொள்ளவும் அது சிபாரிசு செய்தது. வர்த்தக வங்கிகளுக்கு செய்வது போல கூட்டுறவு வங்கிகளுக்கு குறிப்பிட்ட கால கடன்களை விவசாய மறு நிதி, வளர்ச்சிக் கார்ப்பரேஷன் வழங்க வேண்டும் என்று கமிட்டி கூறியது. விவசாய மறு நிதி கார்ப்பரேஷன் அல்லாத பணிகளுக்கு தேவையான வசதிகளை கடன் பத்திரங்களை(பாண்டுகள்) வெளியிடுவதன் மூலம் பெற வேண்டும். அதற்கு அடமான உருவில் வழக்கமான ரக உத்தரவாதம் தேவையில்லை என கருதியது.
விவசாயத்தை நவீனமாக்குவதை ஊக்குவிக்கவும், தீவிரப்படுத்தவும் கூட்டுறவு வழங்கலை முடுக்கிவிட கடன் கமிட்டி கோரியது.
கூட்டுறவு கடன் வசதி அமைப்பின் இரு அங்கங்கள் தனித்தனியான வகையில் வளர்ந்துள்ளன. அவை முதலீட்டு கடன் வசதியை பயனற்றதாகக் செய்து விடும் என அது கருதியது. ...
5.10.1976: Sarkaria Commission inquiry in Delhi: Another airline chief testifies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.