FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

22.10.1976: சீனாவின் புதிய பிரதமராக லீ நியமிக்கப்பட்டார்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

22.10.1976 - Dinamani
பகிர்:

ஹாங்காங், அக். 21 - இதுவரை சீனாவின் உதவிப் பிரதமராக இருந்து வந்த லீ சியன் நியன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஹாங்காங் சீனமொழிப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவரான ஹூவாகுவோ -பெங் தலைமையில் நாட்டின் தலைமை வரிசையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

அப்பத்திரிகை நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு பட்டியல் வெளியிட்டு அப்பட்டியலே சீனத் தலைமை வரிசையின் புதிய பட்டியலாகும் என்றும் கூறியது.

Advertisement

Advertisement

புதிய பாதுகாப்பு மந்திரி

பீகிங்கில் மா-ஸே-துங்குக்கு அடுத்தபடியாக தலைமை வரிசை பிரச்னை முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் சீன மொழி பத்திரிகை ஒன்று கூறியது.

ஹூவா கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு மார்ஷல் யே சியன் ஒயிங், ஜெனரல் சென் சி லியன், லி சியன் நியன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக நம்பத்தக்க வட்டார செய்தியை அது வெளியிட்டது.

மார்ஷல் யேக்குப் பதிலாக ஜெனரல் சென் பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகை கூறியது.

கட்சி முதல் துணைவராக இருப்பதுடன் ராணுவ கமிஷன் தலைவராகவும் மார்ஷல் யே நியமிக்கப்பட்டிருக்கிறார். ...

அரசியல் சாசன திருத்த மசோதா ஒத்திவைப்பா?

புது டில்லி, அக். 21 - அரசியல் நிர்ணய சபை ஒன்றைக் கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பல மாநில அமைப்புகள் யோசனை தெரிவித்திருப்பது, அரசியல் சாசனத் திருத்த மசோதா ஒத்திவைப்புக்கு வழி வகுக்கக்கூடும்.

அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக திங்கட்கிழமையன்று பார்லிமெண்ட் விசேஷமாகக் கூட்டப்பட்டிருக்கிறது. பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையிலும், கூட்டுச் சிந்தனையும் பரிசிலனையும் அமையும் வகையிலும் உத்தேச திருத்தங்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்று பார்லிமெண்ட் விவாதிக்கக்கூடும்.

இரு கருத்துக்கள்

இரு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய பார்லிமெண்ட் தன்னை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கருத்து. மாநில அசெம்பிளிகள் தேர்ந்தெடுக்குமாறு பிரதிநிதிகளை கூறப்பட வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும், பார்லிமெண்டின் இகு சபைகளையும் சேர்ந்த சில உறுப்பினர்களும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக அமைய வேண்டும் என்று மற்றொரு கருத்து கூறப்பட்டுள்ளது. ...

summary

22.10.1976: Li appointed as China's new premier

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments