FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

23.9.1976: அக்டோபர் 12 முதல் 28 புதிய ரயில்கள்: நெல்லை - மணியாச்சி எக்ஸ்பிரஸ்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

22 செப்டம்பர் 2026, 8:03 pm IST
23.9.1976 - Dinamani
பகிர்:

புதுடில்லி. செப். 21 - அக்டோபர் 1-ந் தேதியிலிருந்து புதிதாக 28 ரயில்களை விட ரயில்வே இலாகா தீர்மானித்துள்ளது. மற்றும் 12 ரயில்களை நீட்டிப்பதெனவும் முடிவு செய்திருக்கிறது.

1976 அக்டோபர் 1-ந் தேதி முதல் புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது. அப்போது இவை அமலுக்குவரும். மற்றும், 3 ரயில்களைப் பொருத்தவரை அவற்றின் பயண தடவைகள் அதிகரிக்கப்படும்; 8 ரயில்களுக்கு டீசல் இஞ்சின் பூட்டப்படும்; 28 ரயில்களின் பயண நேரத்தில் ஒரு மணிக்கு மேல் குறைக்கப்படும்.

புதிதாக விடப்படும் ரயில்களில், 16 பிராட்காஜிலும், 12 ரயில்கள் மீட்டர் காஜிலும் இருக்கும். இதில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 16 பாசஞ்சர் ரயில்கள், 2 டீசல் கார் சர்வீஸ் ரயில்கள், 2 புறநகர் லோகல் ரயில்கள்.

Advertisement

Advertisement

இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது: டில்லிக்கும் - செகந்திராபாதுக்கு மிடையில் வாரத்துக்கு இருமுறை விடப்படவிருக்கும் ஆந்திர பிரதேச க்ஸ்பிரஸ் ஆகும். எ

மணியாச்சி - திருநெல்வேலி எக்ஸ்பிரசும் இந்தப் புதிய ரயில்களில் ஒன்றாகும். தவிர, காரைக்குடிக்கும் மானாமதுரைக்கு மிடையில் விடப்படவிருக்கும் பாசஞ்சர் ரயிலும் புதிய ரயில்களில் ஒன்றாகும்.

summary

23.9.1976: 28 new trains from October 12: Nellai - Maniachi Express.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments