முகப்பு
செய்திகள்

கடுமையான சளி பிரச்னையை குணமாக்க இதோ ஒரு எளிய தீர்வு!

வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:


சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து 

தீர்வு  : இரண்டு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள, விதையுள்ள காய்) எடுத்துக் கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான  நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (10) , ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன்  தக்காளி (1), மிளகு (2), கொஞ்சம் மஞ்சள் தூள்,  தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து  ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.