தோலில் உண்டாகும் மஞ்சள் நிறம், அரிப்பு மற்றும் ஆசனவாயில் உண்டாகும் அரிப்பு நீங்க
நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
தீர்வு : முற்றின முருங்கைகாயில் உள்ள முற்றின விதை (15) அல்லது முருங்க விதை பவுடர் (3 ஸ்பூன்), கோவக்காய் (15), புதினா (சிறிதளவு), மஞ்சள் தூள் (சிறிதளவு) இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். ஒரு வேளை உணவில் தினமும் முருங்கக்காய் அல்லது முருங்கைக் கீரையை நீராவியில் வேக வைத்து பொறியலாக உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வரவும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வரவும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
Advertisement
Advertisement
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.