அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறைபாடு நீங்க
வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம்
சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.
தீர்வு : நன்கு இளம் பிஞ்சு வெண்டைக்காயை எடுத்து ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு அதன்மேலே உள்ள ரோமம் போன்ற பகுதியை நன்றாக துடைத்து காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தலா மூன்று வெண்டைக்காய் வீதம் பச்சையாக சாப்பிட்டு வரவும் .
மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை நீராவியில் வேக வைத்து அதனுடன் சீரகம் கொஞ்சம் அதிகம் சேர்த்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.
Advertisement
Advertisement
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.