இன்றைய மருத்துவ சிந்தனை திப்பிலி
திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்), மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ),
திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்), மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ), சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.
திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.
திப்பிலி (10), கிராம்பு (5), மிளகு (5), மஞ்சள் தூள் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை தண்ணீரில் (3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.
Advertisement
Advertisement
திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
திப்பிலியை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.