முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (24.01.2017) முருங்கை

முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து, அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால்

Updated On : 24 ஜனவரி 2017, 10:34 am IST
பகிர்:

முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து, அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் விக்கல், இரைப்பு, கீழ் வாயு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகு வலி போன்றவை நீங்கும்.

முருங்கைப் பிசினை தேங்காய் எண்ணெய்யில் கரைத்து காதில் சில துளிகள் விட்டால் காதுப் புண் ஆறும்.

முருங்கைப் பட்டை, திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள கபம் இளகி வேளியேறும்.

Advertisement

Advertisement

முருங்கைப் பட்டைச் சாறு, குப்பைமேனிச் சாறு இரண்டையும் நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சித் தடவிக்கொண்டால் கரப்பான், சொரி ,சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

முருங்கைக் காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலம் பெறும்.

முருங்கைக் காயை மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால் கபம், இருமல் விலகும்.

முருங்கைப் பிசினை(50 கிராம்), சட்டியில் போட்டு தண்ணீர் (1லிட்டர்) ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments