உங்கள் காதுகளில் அழுத்தம் இருப்பது போன்ற உணர்வு உள்ளதா? இதோ ஒரு எளிய தீர்வு!
காதுகளின் உட்புறம் நீர் அமைந்துள்ளது.நாம் நேராக நிற்பதற்கு இந்த நீரானது உதவி செய்யும்
அறிகுறிகள் : காதுகளின் உட்புறம் நீர் அமைந்துள்ளது.நாம் நேராக நிற்பதற்கு இந்த நீரானது உதவி செய்யும் எனவே காதில் உள்ள நீரின் உப்பின் அளவு அதிகமானால் ஒரு அழுத்தம் இருப்பதாக உணர்வார்கள்.
மண்டலம் - சிறுநீரக மண்டலம்
காய் - கத்தரிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - வைகாசி
குணம் - சகிப்புத்தன்மை
ராசி/லக்கினம் - ரிஷபம்
சத்துக்கள் : வைட்டமின் B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட் , நார்ச் சத்து
Advertisement
Advertisement
கத்தரிக்காய் : ஒரு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொண்டு ஒரு 15 நிமிடம் சுடு நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (5), புதினா (சிறிதளவு), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை), ஒரு தக்காளி, மிளகு(2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.