FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம்: மேனகா காந்தி

அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

சமுதாயத்திற்கு சேவை செய்த 100 சிறந்த பெண்மணிகளை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்று முகநூல் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக நடந்த கலந்துரையாடலில், அரியானாவில் உள்ள குர்கானில் சவூதி தூதரக அதிகாரிகளால் நேபாள பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து, பாதுகாப்பு குறித்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், அனைத்து விதமான வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. அனைத்து விதமான வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம்.

Advertisement

Advertisement

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் 2015ன் கீழ், என்னமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம். வெளிநாடுளை விட, இந்தியாவில் தான் பெண்களைப் பற்றிய செய்திகளை ஊடகம் மற்றும் தொலைகாட்சிகள் அதிகம் ஒளிபரப்புகின்றன.

நாட்டின் கல்வி அமைப்பில் பாலினம் மற்றும் விலங்குகள் குறித்து அதிக புரிதல்களை உருவாக்கும் வகையில் அதிகமான பாடங்கள் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் இந்தியாவில் ஒரு பள்ளி உருவாக வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments