FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிரியா அகதிகள் விவகாரம்: அரபு நாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்

சிரியா நாட்டு அகதிகளை ஏற்க மறுக்கும் அரபு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சிரியா நாட்டு அகதிகளை ஏற்க மறுக்கும் அரபு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடான ஆர்கனைஸரில் திங்கள்கிழமை வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.
 ஆனால், அவ்வாறு வெளியேறும் அகதிகளுக்கு தங்கள் நாட்டில் இடம் கொடுப்பதற்கு சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளை மட்டுமே குற்றம்சாட்டுவது நியாயமல்ல. குவைத், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும், மேற்காசிய நாடுகளும் கூட சிரியா அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதில்லை.
 ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது அவர்களுக்கு இணையான செல்வ வளமை அரபு நாடுகளிடமும், மேற்காசிய நாடுகளிடமும் உள்ளது.
 ஆனால், தங்கள் சொந்த மதத்தினரையே ஏற்பதற்கு ஏதேதோ காரணங்களைக் கூறி அந்த நாடுகள் தட்டிக் கழிக்கின்றன. இதனை விட கீழ்த்தரமான செயல் என்னவாக இருக்க முடியும்?
 மனிதநேயத்தைக் காட்டிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வகுத்துத் தந்த சித்தாந்தமே இந்த நாடுகளுக்கு பெரிதாகத் தெரிகிறது. எனவே, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியலுக்கு முடிவுகட்ட சர்வதேசக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
 அதே சமயத்தில், காலனி ஆதிக்கத்துக்காகவும், நாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் தாங்கள் மேற்கொண்ட செயல்களின் பின்விளைவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளும், சிரியா பிரச்னை போன்ற விவகாரங்களும் என்பதை ஐரோப்பிய நாடுகள் மறந்துவிடக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments