FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிகார்: ரூ.1.65 கோடி ரொக்கம் பறிமுதல்

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட கணக்கில் வராத பணம் ரூ.1.65 கோடியை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பிகாரின் கயை பகுதியில் சென்ற கார் ஒன்றை சோதனையிட்ட போது, அதில் கணக்கில் வராத பணம் ரூ.1.38 கோடி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 அதேபோல வைஷாலி, மதுபானி, போஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இதைத் தவிர, 10,000 லிட்டர் மதுபானங்களும், 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments