5 மாநிலத் தேர்தல்: இடதுசாரிகளை ஆதரித்து கன்னையா பிரசாரம்
மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக
மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமார் பிரசாரம் செய்வார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், "கன்னையா குமார், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர். ஆகையால் இடதுசாரி என்ற முறையில், அவர் இடதுசாரிக் கட்சிகளுக்கு பிரசாரம் செய்வார்' என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், "பல்வேறு இடங்களிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன' என்றார்.
அரசியல்வாதியல்ல; மாணவர்தான்-கன்னையா குமார்: இதனிடையே, தில்லியில் செய்தியாளர்களிடம் கன்னையா குமார் வெள்ளிக்கிழமை பேசியபோது தாம் ஒரு மாணவர் என்றும், அரசியல்வாதியல்ல என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் அரசியல்வாதியல்ல. நான் ஒரு மாணவர். அரசியலில் ஈடுபடும் எண்ணமோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்குக் கிடையாது. மாணவர் போன்று கேள்வி எழுப்புவதையும், எதிர்காலத்தில் ஆசிரியர் போன்று பதிலளிப்பதையுமே விரும்புகிறேன்.
ஆகையால், எனது அரசியல் இலட்சியங்கள் குறித்து கேள்வி எழுப்புவதை கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நாட்டு மக்கள் எனக்காக வாக்களிக்கவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள்தான் என்னைத் தேர்வு செய்தனர். நான் மாணவர்களுக்காக மட்டுமே பேசுகிறேன், பேசுவேன். அப்சல் குரு எனது முன்னுதாரணம் கிடையாது. ரோஹித் வேமூலாவே எனது முன்னுதாரணம் என்றார் கன்னையா குமார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.