FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து, எல்லையில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:11 am IST
பகிர்:


இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து, எல்லையில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருக்கும் டைரக்டர் ஜெனரல் (தெற்காசியா விவகாரம்) முகமது பைசல், இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தார். 
பின்னர் அவரிடம், எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானின் காஸ்லா பகுதியை சேர்ந்த 35 வயது பெண் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
2018ஆம் ஆண்டில் மட்டும் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 1,400 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 30 பேர் உயிரிழந்துவிட்டனர், 121 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் முகமது பைசல் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு முதல் எல்லையில் இந்திய ராணுவத்தினர் கண்மூடித்தனமாக அத்துமீறி வருகின்றனர், இது 1970ஆம் ஆண்டு நடந்த அத்துமீறல்களுக்கு இணையானது எனவும் அவர் தெரிவித்தார். அப்பாவி மக்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர், இது கண்டிக்கத்தக்கது, மனித நேயம், சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என்றும் பைசல் புகார் தெரிவித்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மதித்து நடக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட முகமது பைசல், எல்லையில் நடந்துள்ள இந்த அத்துமீறல் குறித்தும், பிற அத்துமீறல்கள் குறித்தும் விசாரணை நடத்துவதுடன், எதிர்காலத்தில் போர் நிறுத்தத்தை மீறக் கூடாது என இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் என்று அந்த அறிக்கையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments