FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

165 நாடுகளுக்கு இ-விசா வசதி நீட்டிப்பு

சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் இ-விசா வசதியை, 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் இ-விசா வசதியை, 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
உலக நாடுகளிடையே இந்திய சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, வியத்தகு இந்தியா 2.0' என்ற பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மொழிகளில் தகவல்களைப் பெறும் வசதியுடன் கூடிய சுற்றுலா உதவி எண் செயல்பாட்டில் உள்ளது. மேலும், சுற்றுலா திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக சர்வதேச பௌத்த மத மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா கண்காட்சிகள், திருவிழாக்கள் நடத்துமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்காக நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. அத்துடன், 165 நாடுகளின் குடிமக்களுக்கு இ-விசா வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 
வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு: 2016-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2017-ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் சுமார் 1 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா துறை மூலம் நாட்டுக்கு கடந்த ஆண்டில் கிடைத்த அன்னிய செலாவணி வருவாய் ரூ.1.77 லட்சம் கோடி ஆகும். கடந்த 2015, 2016-ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.1.35 லட்சம் கோடி, ரூ.1.54 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது என்றார் அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments