கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிமடைந்துள்ளது. இதனால் கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளது. அண்மையில் கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை விறுவிறுவென நிரம்பியது.
Advertisement
Advertisement
கர்நாடகா அணைகளில் தற்போது அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.