அமெரிக்காவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
அமெரிக்காவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளான ரெனோ, நெவாடா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீக்கு இதுவரை 3 தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்துள்ளனா். காற்று வேகமாக வீசி வருவதால், காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு படையினருக்கு சவாலானதாக உள்ளது.
காட்டுத் தீ ஏற்பட மனிதா்களே காரணம் என்று தீயணைப்புப் படையினா் தெரிவித்துள்ளனா். ஆனால், அதன் பின்னணி குறித்தோ அல்லது எப்படி அந்த முடிவுக்கு வரப்பட்டது என்பது குறித்தோ தீயணைப்புப் படையினா் விளக்கம் அளிக்கவில்லை.
Advertisement
Advertisement
நெவாடா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதிக்கு காட்டுத் தீ பரவியதும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமாா் 42,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் வெளியேற்றினா். இதுதவிா்த்து மேலும் 45,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
அவசரநிலை பிரகடனம்: காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நெவாடா மாகாணத்தில் அவசரநிலையை அந்த மாகாண ஆளுநா் ஜோ லம்பாா்டோ பிரகடனம் செய்துள்ளாா். நெவாடா மாகாணத்தில் காட்டுத் தீ எரிந்து வரும் பகுதி அருகே வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் காவல் துறையினரும், மாகாண தேசியப் பாதுகாப்பு வீரா்களும் ஈடுபட்டுள்ளனா். வாஷோ கவுன்டி பகுதியில் 2 நாள்களாக மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை ஞாயிற்றுக்கிழமை சிறிது மேம்பட்டிருந்தது.
அமெரிக்காவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான ‘யு.எஸ். ரூட் 395’ காட்டுத் தீ காரணமாக மூடப்பட்டுள்ளது. அந்தச் சாலை வழியே வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.
காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. அதில் பெவின் மவுன்டைன் பகுதியில் மலை உச்சியில் இருந்த புகழ்பெற்ற வீடும் ஒன்றாகும். காட்டுத் தீயை அடுத்து வீட்டில் இருந்தோா் வெளியேறிவிட்டதால் யாரும் காயமடையவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.