FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி

வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சோனியா காந்தி: அரசியலில் மிக உயர்ந்த தலைவராக விளங்கியவர் வாஜ்பாய். அவரது கனிவும், பண்புமிக்க நட்பும் கட்சி பாகுபாடுகளைக் கடந்து பலரையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் ஜனநாயக மாண்புகளைக் காக்க பாடுபட்ட அவரது மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்: இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாய் ஜொலித்தவர் வாஜ்பாய். அவரது இடத்தை வேறு எவரும் நிரப்ப முடியாது. இந்தியத் தாயின் விலைமதிக்க முடியாத அணிகலன்களில் ஒன்றாகத் திகழ்ந்த அவர், தற்போது மண்ணை விட்டு மறைந்து விண்ணுக்கு அணி சேர்க்க சென்றுள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா: வாஜ்பாயின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களது மிகச் சிறந்த நண்பரை நாங்கள் இழந்திருக்கிறோம். அவரது இழப்பு இந்தியாவுக்கு மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்துக்கே ஈடு செய்ய முடியாத ஒன்று.
இதேபோன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில், இரு நாட்டு நல்லுறவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வித்திட்டவர் வாஜ்பாய் என புகழாரம் 
சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments