FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின்!

சுதந்திர தினத்தன்று இந்தியாவில் முதன்முறையாக பென்குயின் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சுதந்திர தினத்தன்று இந்தியாவில் முதன்முறையாக பென்குயின் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

மும்பையில் உள்ள வீரமாதா ஜிஜாபாய் போஸ்லே உதயான் உயிரியல் பூங்காவில் இந்தியாவின் முதல் பென்குயின் குட்டி பிறந்துள்ளது. ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று இரவு 08.02 மணியளவில் முட்டைப் பொறிந்து அது வெளியேறியது. 

தாயும், குட்டியும் நலமுடன் இருப்பதாக அந்த உயிரியல் பூங்காவின் இயக்குநர் சஞ்சய் திரிபாதி தெரிவித்துள்ளார். மேலும் கூடிய விரைவில் அது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் ஹம்போல்ட் வகை பென்குயின் இனப் பறவை பிறந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

Advertisement

Advertisement

இந்த உயிரியல் பூங்காவில் ஹம்போல்ட் வகையைச் சேர்ந்த 4 பெண் மற்றும் 3 ஆண் பென்குயின்கள் உள்ளன. அவற்றில் 3 ஜோடிகள் அடங்கும். முன்னதாக, இந்த வகை பென்குயின்களில் 7 தென் கொரியாவில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டன. ஆனால் டோரி என்ற ஒரு பென்குயின் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துவிட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments