FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தலுக்காக எனது ஜாதி பெயரை பயன்படுத்தியது ஆம் ஆத்மி: ஆஷுதோஷ் குற்றச்சாட்டு

"கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக, எனது விருப்பத்திற்கு மாறாக எனது ஜாதிப் பெயரை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்திக் கொண்டது' என்று அக்கட்சியிலிருந்து

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

"கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக, எனது விருப்பத்திற்கு மாறாக எனது ஜாதிப் பெயரை ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்திக் கொண்டது' என்று அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ஆஷுதோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: எனது 23 ஆண்டுகால இதழியல் பணி வாழ்வில் ஒருவர் கூட எனது ஜாதிப் பெயரைக் கேட்டதில்லை. நான் எனது பெயரால்தான் அறியப்பட்டேன். ஆனால்,  2014 மக்களவை தேர்தலின்போது கட்சித் தொண்டர்களிடம் எனது ஜாதிப் பெயரால்  அறிமுகப்படுத்தப்பட்டேன். எனது எதிர்ப்பையும் மீறி எனது ஜாதிப் பெயர் குறிப்பிடப்பட்டது. எனது ஜாதியைச் சேர்ந்த பல வாக்காளர்கள் இருப்பதால் ஜாதிப் பெயரைக் குறிப்பிடாமல் எப்படி நான் ஜெயிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது' என்று ஆஷுதோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஷுதோஷிடம் கேட்ட போது,   தாம் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை என்றும்,  தாம் தனிப்பட்ட முறையில் சுட்டுரையில் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 2014  மக்களவைத் தேர்தலின்போது சாந்தினி சௌக் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், பாஜக சார்பில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் போட்டியிட்டினர்.  இத்தேர்தலில் ஹர்ஷ் வர்தன் வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஆஷுதோஷ்,  கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.  எனினும்,  அவருடைய ராஜிநாமாவை ஏற்கப் போவதில்லை என தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தமது பெயரில் உள்ள மார்லினா என்ற சொல்லை  நீக்குவதாக, 2019-ஆம் ஆண்டில் கிழக்கு மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட உள்ள அதிஷி  கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், "மார்லினா என்பது எனது ஜாதிப் பெயர் அல்ல. எனது சாதிப் பெயர் சிங். பெற்றோர் இட்ட இந்தப் பெயரை நான் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.  என்னுடைய தேர்தல் பிரசாரத்தில் அதிஷி என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தப் போகிறேன்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  ஆஷுதோஷ் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments