FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பணமதிப்பிழப்பால் பதுக்கியிருந்த பணம் வெளிவந்தது: வெங்கய்ய நாயுடு

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக, கழிவறைகளிலும், படுக்கையறைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

ஹைதராபாத்: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக, கழிவறைகளிலும், படுக்கையறைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வங்கிக் கட்டமைப்புக்குள் வந்தது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது புழக்கத்தில் இருந்த 99.3 சதவீதப் பணம் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பது குறித்து பொதுமக்கள் கவலையடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை கூறியதாவது: 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏறக்குறைய அனைத்துப் பணமும் வங்கிக் கட்டமைப்புக்குள் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கழிவறைகளிலும், படுக்கையறைகளிலும் பதுக்கப்பட்ட பணம் வங்கிகளுக்கு திரும்பியிருக்கிறது. அவ்வாறு வங்கிக்கு வந்த பணத்தில் எவ்வளவு தொகை கருப்புப் பணம் அல்லது நல்ல பணம் என்பதைக் கண்டறிவது ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறையின் கடமை. அதை அவர்கள் உறுதி செய்வார்கள்.
மக்கள் கருப்புப் பணத்தை, நல்ல பணமாக மாற்ற விரும்பியதால், அதற்கும் நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. பதுக்கிய பணத்துக்கு கூடுதல் வரி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அந்தப் பணம் பொதுமக்களுக்காக செலவிடப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments