FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்களுக்கு ரூ.15 லட்சம் மெதுவாக வரும்! ராம்தாஸ் அதாவலே

நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் பணம் மெதுவாக வந்து சேரும்; இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் பணம் மெதுவாக வந்து சேரும்; இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன என்று மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டு, நாட்டு மக்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி மக்களை ஏமாற்றிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். காங்கிரஸ் மட்டுமன்றி பல்வேறு எதிர்க்கட்சிகளும் அவரை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், இஸ்லாம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்தாஸ் அதாவாலேவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அவர் அளித்த பதில் வருமாறு: இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும், அதனை நிறைவேற்றுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன. மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் பணம் ஒரேயடியாக வந்து சேராது. மெதுவாகவே வரும். மத்திய அரசிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு நிதி கோரியது. ஆனால், ரிசர்வ் வங்கி நிதி வழங்கவில்லை என்றார் ராம்தாஸ் அதாவலே.
பிரதமர் நரேந்திர மோடி, துடிப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும் அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments