2-ஐ தக்க வைங்க, இல்லன்னா பூஜ்ஜியம் தான்: பாஜக-வுக்கு திரிணாமுல் எம்.பி. அட்வைஸ்
ரசகுல்லாவைப் போன்று பூஜ்ஜியம் தொகுதிகளைத் தான் பெற முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான தேரேக் ஓ பிரையன் தெரிவித்தார்.
வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜக-வுக்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான தேரேக் ஓ பிரையன் கூறியதாவது, மேற்கு வங்கத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பது போன்ற மிகக் கடின இலக்குகளை ஏற்படுத்திக்கொள்வதை விடுத்து, இருக்கும் 2 தொகுதிகளையாவது தக்க வைத்துக்கொள்ள பாஜக முயற்சி எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ரசகுல்லாவைப் போன்று பூஜ்ஜியம் தொகுதிகளைத் தான் பெற முடியும் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.