FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள கெரன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

Updated On : 8 ஜூன் 2018, 1:06 am IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள கெரன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
எல்லையையொட்டி அமைந்துள்ள கெரன் பகுதியில் பாதுகாப்புச் சாவடி உள்ளது. அங்கு, பயங்கரவாதிகள் வியாழக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர்.
ராணுவ வீரர்களும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக வியாழக்கிழமை சென்றுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments