FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பணம் பறித்தல் வழக்கில் அபு சலேமுக்கு 7 ஆண்டு சிறை

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட அபு சலேமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 8 ஜூன் 2018, 1:19 am IST
பகிர்:

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட அபு சலேமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, அபு சலேம் தன்னிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டுவதாக தெற்கு தில்லியைச் சேர்ந்த அசோக் குப்தா என்ற தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அந்தப் புகாரின் பேரில் அபு சலேமுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், புகார் தெரிவிக்கப்பட்ட அபு சலேம் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த மே 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
இந்நிலையில், குற்றவாளியான அபு சலேமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தருண் ஷெராவத் தீர்ப்பளித்தார்.
எனினும், இந்த வழக்கில் அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த இதர நபர்களான சாஞ்சல் மேத்தா, மஜித் கான், பவன் குமார் மிட்டல், முகமது அஷ்ரஃப் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறிய நீதிபதி தருண், அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். 
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றொரு நபரான சஜ்ஜன் குமார் சோனி விசாரணையின்போது உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
1993-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபு சலேம், போர்ச்சுகலில் தலைமறைவாகியிருந்தபோது கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments