FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹிந்துக்களுக்கு மட்டுமே சேவை: கர்நாடக பாஜக எம்எல்ஏ பேச்சு

தமக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு மட்டும் சேவையாற்றினால் போதும். முஸ்லிம்களுக்கு சேவையாற்ற வேண்டியதில்லை என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாடில் யாத்னால்

Updated On : 8 ஜூன் 2018, 1:05 am IST
பகிர்:


தமக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு மட்டும் சேவையாற்றினால் போதும். முஸ்லிம்களுக்கு சேவையாற்ற வேண்டியதில்லை என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாடில் யாத்னால் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4-ஆம் தேதி விஜயபூராவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இவ்வாறு அவர் பேசிய விடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், மாநகராட்சி பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, பீஜபூரில் எனக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு மட்டும் சேவையாற்றினால் போதும், முஸ்லிம்களுக்கு வேண்டியதில்லை என அறிவுறுத்தினேன். தொடக்கத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் ஒதுக்கி வருகிறேன். தலையில் குல்லா போட்டிருப்பவர்கள், பர்கா அணிந்திருப்பவர்களும் எனது அலுவலகம் அல்லது என் முன்னால் வந்து நிற்க கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறேன் என்று பசனகெளடா பேசியிருக்கிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், இதே பசனகெளடா மத்திய அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments