FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கடவுச் சீட்டு பெற புதிய செயலி: இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்

கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்வதற்கான புதிய செயலியை (ஆப்) வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

Updated On : 27 ஜூன் 2018, 1:19 am IST
பகிர்:

கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்வதற்கான புதிய செயலியை (ஆப்) வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.
எம் பாஸ்போர்ட் சேவா ஆப்' என்ற இந்த செயலி மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க கணினி, பிரிட்டர் போன்றவை தேவையில்லை. இதன் மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், கடவுச் சீட்டு பெற தேவையற்ற ஆவணங்களைக் கேட்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, இனி திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை' என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இது தவிர ஒருவர் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், அப்பகுதியில் உள்ள பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம், பாஸ்போர்ட் சேவா கேந்திரம், அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் ஆகியவற்றில் ஒன்றில் கடவுச் சீட்டு பெற விண்ணப்பிக்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த ஒருவர் தற்காலிமாக கொல்கத்தாவில் தங்கியிருந்தால், கடவுச்சீட்டு விண்ணப்பத்தை சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்து சமர்பிக்க வேண்டிய தேவையில்லை. 
கொல்கத்தாவில் உள்ள பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம், பாஸ்போர்ட் சேவா கேந்திரம், அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் ஆகியவற்றில் ஒன்றில் விண்ணப்பத்தை அளித்தால் போதுமானது. 
விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள முகவரியில் காவல் துறை மூலம் நேரடி ஆய்வு நடைபெறும். 
விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில், விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments