FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

செல்லாதது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது தெரியுமா? 

செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

Updated On : 18 மார்ச் 2018, 5:28 pm IST
பகிர்:

மும்பை: செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்பொழுது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

அதன்பின் பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிதாக அறிமுகமான ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி ரிசர்வ் வங்கிக்கு ஏறக்குறைய 99 சதவீதத்துக்கும் செல்லாத நோட்டுகள் வந்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் கோரி இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி நோட்டுகள் வங்கிக்குள் வந்துவிட்டன. இந்த நோட்டுக்கள் அனைத்தும் துல்லியமாக எண்ணப்படும் நவீன எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றது.

அவ்வாறு செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்காக மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட 59 எந்திரங்கள் பல்வேறு ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் வைக்கப்பட்டு அவ்வாறு எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எதையும் ரிசர்வ் வங்கி மறுசுழற்சி செய்யவில்லை. இந்த பணியானது  ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்து வருகிறது. .

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments