காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவில் 3 சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவில் 3 சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் பிராந்திய காவல் துறை ஐஜி ஸ்வயம் பிரகாஷ் பானி, செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பாரமுல்லாவில் கடந்த மாதம் 30-ஆம் தேதி 3 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பயங்கரவாதிகளையும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்த 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 4 பயங்கரவாதிகளில் 2 பேருக்கு சிறார்கள் கொலை வழக்கில் தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
கொலையை நேரில் பார்த்தவர்கள் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இருந்ததாகத் தெரிவித்தனர். துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று ஸ்வயம் பிரகாஷ் பானி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.